சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர் சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2023-10-12 06:25 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் வட்டம், தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று (11-10-2023) மதியம் அப்பகுதியிலுள்ள கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோவில் கடலூருக்கு வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி வட்டம், சிறுவத்தூர் (அ), மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், த/பெ.சரவணன் (வயது 20) என்ற மாணவர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்