கார்-வேன் மோதலில் 2 பேர் பலி

கண்ணமங்கலம் அருகே கார்-வேன் மோதிக்கொண்டதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 போ் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-05 17:06 GMT

கண்ணமங்கலம் அருகே கார்-வேன் மோதிக்கொண்டதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 போ் காயம் அடைந்தனர்.

2 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் ரெட்டி (வயது 61), சூரிய சேகர் ரெட்டி (55), மதுமிதா (45), மோனிகா (43). இவர்கள், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை மெயின்ரோடு காந்திநகர் ஏரி வளைவு பகுதியில் வந்த போது காரும், திருவண்ணாமலை நோக்கி சென்ற வேனும் மோதிக்கொண்டன. இதில் சேகர் ரெட்டி, சூரிய சேகர் ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

5 பேர் காயம்

மேலும் இந்த விபத்தில் காரில் வந்த மதுமிதா, மோனிகா மற்றும் வேனில் வந்த வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை பத்மாவதி (70), தினகரன் (33), அரிதாஸ் (3) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்