ரெயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆம்பூரில் ரெயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-15 18:46 GMT

ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்- வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டு இருக்கும் போது சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதுகுறித்து அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் அந்த பை யாருடையது என்பது தெரியவில்லை.

அதைத்தொடர்ந்து கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்