ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் 2 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூரமங்கலம்:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அதிகாலை ரெயில்வே போலீசார் கண்ணன், சங்கர், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திருப்பத்தூர் ரெயில் நிலையம் முதல் சாமல்பட்டி ரெயில் நிலையம் வரை சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில், 2 பண்டல்களில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டது. ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.