மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் சாவு
மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தன.
விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. வழக்கமாக ஜல்லிக்கட்டு முடிந்த பின்பு சில காளைகள் திசை தெரியாமல் ஓடிவிடும். இந்தநிலையில் நேற்று ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கரிசல்குளத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி 2 காளைகளும் இறந்தது தெரியவந்தது. இதில் ஒரு காளை மதுரை ெஜய்ஹிந்த்புரத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் (வயது32) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மற்றொரு காளைக்கு உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்ெகாண்டுள்ளனர்.