பஸ் டயர் வெடித்ததில் 2 பேர் காயம்

மணல்மேடு அருகே பஸ் டயர் வெடித்ததில் 2 பேர் காயம்;

Update: 2023-05-16 18:45 GMT

மணல்மேடு:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஒரு தனியார் பஸ் மணல்மேடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த பஸ் மணல்மேடு அருகே அழகன் தோப்பு என்ற இடத்தில் சென்றபோது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்து சிதறியது. இதில் டயரின் மேல் பகுதி பட்டை உடைந்ததில் பஸ்சில் பயணம் செய்த, மணல்மேடு அருகே மன்னிப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகள் திவ்யா (வயது 18) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பிரிதிவிராஜ் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே காயம் ஏற்பட்ட இருவரையும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்