வீடுகளில் புகுந்த 2 உடும்பு பிடிபட்டது

கடையம் , வனவடலிசத்திரம் பகுதியில் வீடுகளில் புகுந்த 2 உடும்பு பிடிபட்டது.

Update: 2022-10-25 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி ரகுமத்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சிந்தா மதார். இவரது வீட்டு படிக்கட்டின் கீழ் ஏதோ ஒரு உயிரினம் இருப்பது போல சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவு பேரில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு படிக்கட்டின் கீழ் பகுதியில் உடும்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் படிக்கட்டுகளை உடைத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடும்பை பிடித்தனர். சுமார் 3 அடி நீளமுள்ள அந்த உடும்பு கடையம் ராமநதி பீட் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

இதேபோல் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் கொம்பையா. இவரது வீட்டில் உடும்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வீட்டில் பதுங்கி இருந்த அரிய வகை உடும்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்