குட்கா கடத்திய 2 பேர் கைது

Update: 2023-06-12 19:30 GMT

சூளகிரி:-

சூளகிரி போலீசார், ஓசூர் - சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் பெட்ரோல் பங்க் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் 16 கிலோ குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து குட்கா கடத்தியதாக சூளகிரி தாலுகா சப்படி அருகே உள்ள திருமலைகவுனிகொட்டாய் பகுதியை சேர்ந்த முராத்கான் (வயது 43), சானமாவு பகுதியை சேர்ந்த தஸ்தகீர் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மோட்டார்சைக்கிளும், 16 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்