முன்விரோத தகராறில் 2 மீன் வியாபாரிகள் கைது

முன்விரோத தகராறில் 2 மீன் வியாபாரிகள் கைது

Update: 2023-01-26 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சகாயம் (வயது 40), கணேசபுரத்தில் மீன்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் மீன்கடை நடத்தி வரும் இளங்கடை பகுதியை சேர்ந்த பெனிட்டோ (42) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் சகாயம் கணேசபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெனிட்டோ, சகாயத்தை தகாத வார்த்தையால் திட்டினார். இதுகுறித்து சகாயம் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு பெனிட்டோவை கைது செய்தனர். இதேபோல பெனிட்டோ தன்னை சகாயம் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் செய்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயத்தையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்