விஷக்கிழங்கை தின்று 2 மீனவர்கள் தற்கொலை

கோடியக்காடு அருகே விஷக்கிழங்கை தின்று 2 மீனவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-01-16 18:45 GMT

வேதாரண்யம்:

கோடியக்காடு அருகே விஷக்கிழங்கை தின்று 2 மீனவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர் தற்கொலை

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் மாரியப்பன்(வயது48). மீனவர். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த மாரியப்பன் சம்பவத்தன்று கார்த்திகை கிழங்கு எனப்படும் விஷக்கிழங்கை அரைத்து தின்றுள்ளார்.. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இங்கர்சால், கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது22). மீனவர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் சம்பவத்தன்று விஷக்கிழங்கை அரைத்து தின்று விட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்