லாரிகளில் மண் கடத்திய 2 டிரைவர்கள் கைது

லாரிகளில் மண் கடத்திய 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-12 19:46 GMT

வடக்கன்குளம்:

பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் விஸ்வநாதபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர்.

இதில் குளத்தில் உள்ள கரம்பை மண்ணை முறைகேடாக அள்ளி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர்களான சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜெயபாலன் (வயது 42), குலவன்குடியிருப்பைச் சார்ந்த ரமேஷ் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்