அக்னி குண்டத்தில் தவறி விழுந்து 2 பக்தர்கள் படுகாயம்

தியாகதுருகத்தில் தீமிதி திருவிழா அக்னி குண்டத்தில் தவறி விழுந்து 2 பக்தர்கள் படுகாயம்

Update: 2022-07-23 16:16 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகத்தில் பிரசித்தி பெற்ற சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் கழுகு மரம் ஏறுதல், அம்மனுக்கு அபிஷேகம், சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மாலை 5 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தனர். அப்போது தியாகதுருகம் சேலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ரங்கராஜன்(வயது 68), மாதேஸ்வரன் மனைவி கிருஷ்ணவேணி(45) ஆகியோர் தீ மிதிக்கும் போது எதிர்பாரதவிதமாக தவறி அக்னி குண்டத்தில் விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் இருவர் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்