4 கிராமங்களில் 2 நாட்கள் மின்நிறுத்தம்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 4 கிராமங்களில் 2 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2023-07-17 19:00 GMT

கொரடாச்சேரி;

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 4 கிராமங்களில் 2 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மின் வழித்தடம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், பருத்தியூர், விடையபுரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இங்கு மின் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். முகந்தனூரில் இருந்து திருமதிகுன்னம் வழியாக இந்த 4 ஊராட்சிகளுக்கும் மின்வினியோகம் செய்யப்படுகிறது.இந்த வழித்தடத்தின் இடையில் ெரயில்வே கேட் குறுக்கிடுவதால் பூமிக்குள் புதைவட வடிவில் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இருளில் மூழ்கிய ஊராட்சிகள்

இப்பகுதியில் ரயில்வே கேட் அருகில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பணிகளின் போது மின் வழித்தடம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் 4 ஊராட்சிகளிலும் மின்சாரம் 2 நாட்கள் தடைபட்டுள்ளது. இதனை சரி செய்ய சென்னையிலிருந்து கருவிகள் வரவேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதற்கான கருவிகள் வராததால் 4 ஊராட்சிகளும் இருளில் மூழ்கி உள்ளன.

தண்ணீர்

கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், பருத்தியூர், விடையபுரம் ஆகிய 4 ஊராட்சிகளிலும் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அடிப்படை வசதிக்கு 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதியினர் அவதிப்பட்டு வருகிறார்கள்.முதியவர்கள், குழந்தைகள், உடல் நலம் பாதித்தவர்கள் மின்சார வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதை பயன்படுத்தி சிலர் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கி குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாக கூறி பண வசூலில் இறங்கியுள்ளனர்.

சீரமைப்பு பணி

எனவே விரைவில் பணிகளை மேற்கொண்டு 4 ஊராட்சிகளுக்கும் மின்வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மின்வாரியத்தினர் கேபிள் துண்டிக்கப்பட்டதை சரி செய்து மின் வினியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை துாிதமாக முடித்து 4 ஊராட்சிகளுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்