சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 2 நாள் பயிற்சி

சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-09-15 18:45 GMT


சங்கராபுரம்,

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான 2 நாள் பயிற்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மாநில பயிற்சியகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர். 2023-24-ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்வது, ஊராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அஞ்சலைகோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்