ரூ.2½ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தும் பணி

கம்பம் பகுதியில் ரூ.2½ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தும் பணியை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.;

Update:2023-10-19 03:30 IST

கம்பம் நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள தெருக்களில் டியூப் லைட்களை எல்.இ.டி. மின்விளக்குகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.2 கோடியே 55 லட்சத்தில் எல்.இ.டி. மின்விளக்குகள் வாங்கப்பட்டு, பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சுனோதா செல்வக்குமார், ஆணையர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் கூறுகையில், 33 வார்டுகளில் எல்.இ.டி. (ஒளி உமிழும்) விளக்குகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் சுமார் 40 சதவீத மின் கட்டணம் குறையும். மேலும் நகரின் விரிவடைந்த பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் கூடுதலாக 500 மின்விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்