ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

நெல்லையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை நீதிபதி, கலெக்டர் வழங்கினார்கள்.

Update: 2022-11-11 18:55 GMT

நெல்லையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை நீதிபதி, கலெக்டர் வழங்கினார்கள்.

நலத்திட்ட உதவிகள்

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்டப்பணிகள் களம் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர்.

மேலும் 21 அரசு துறைகள் சார்பில் 165 பேருக்கு ரூ.2¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நீதிபதிகள்

இதில் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் அன்புசெல்வி, பத்மநாபன், பன்னீர்செல்வம், குமரேசன், விஜயகுமார், தலைமை குற்றவியல் நடுவர் மனோஜ்குமார், சார்பு நீதிபதிகள் அமிர்தவேலு, இசக்கியப்பன், செந்தில்முரளி, மோகன்ராம், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சுப்பையா, சந்தானம், வள்ளியம்மா, மாஜிஸ்திரேட்டுகள் திரிரேணி, விஜய்ராஜ்குமார், ஆறுமுகம், கவிப்பிரியா, அருண்குமார் மற்றும் வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் காமராஜ் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் இசக்கியப்பன் மற்றும் மக்கள் கோர்ட்டு உறுப்பினர் கோமதிநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்