ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்

ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-08-22 19:36 GMT

துறையூர் பகுதியில் உள்ள பச்சமலையில் கோம்பை ஊராட்சியை சேர்ந்த செம்புளிச்சான்பட்டி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி பேசுகையில், பச்சமலை மக்கள் கேட்டுக்கொண்டபடி ஆரம்ப சுகாதார நிலையமும், மரவள்ளிக் கிழங்கு எடை போடும் எந்திரமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிக்கரை வரை சாலை வசதி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நபார்டு நிதியுதவியின் கீழ் சாலை வசதி ஏற்படுத்தப்படும். பச்சமலைக்கு வந்த ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான், என்றார். இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் குமார், கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் விமலா, உதவி இயக்குனர் அபிராமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெடிக்கல் முரளி, துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன், வீரபத்திரன், துறையூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தர்மன் விஜய், துறையூர் ஒன்றியக்குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்