725 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடியில்நலத்திட்ட உதவிகள்

2¾ crore to 725 beneficiaries Welfare assistance

Update: 2023-08-17 18:41 GMT

நலத்திட்ட உதவி

ஆற்காடு தாலுகா, முப்பது வெட்டி, பூங்கோடு, மாங்காடு, சர்வந்தாங்கல், குஞ்சரப்பந்தாங்கல், லாடவரம், புண்ணப்பாடி, அத்திதாங்கல் ஆகிய கிராமங்கள் மற்றும் புதுப்பாடி உள்வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் புன்னப்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டு 725 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்ச்சி சதவீதம் குறைவு

தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தகுதியுடைய எந்த ஒரு நபரும் விடுபடக் கூடாது என்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு இடைநில்லாமல் செல்ல அறிவுறுத்த வேண்டும். அதேபோல் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதையும் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலைநிகழ்ச்சி

முன்னதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் ்சாராயம் மற்றும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன், ஒன்றியக் குழு உறுப்பினர் கஜபதி, ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் வள்ளி, கலால் உதவி ஆணையர் வரதராஜ், ஆற்காடு தாசில்தார் வசந்தி, சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்