மாமனார் வீட்டில் 2 பசுமாடுகளைவெட்டிக்கொன்ற புதுமாப்பிள்ளைக்கு வலைவீச்சு

மாமனார் வீட்டில் 2 பசுமாடுகளை வெட்டிக்கொன்ற புதுமாப்பிள்ளையை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-12 20:03 GMT


விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவர் ரவி (வயது 53). இவர் மாடுகள் வளர்த்து வருகிறார் இவருடைய மகள் ராமுத்தாயை பாலவன நத்தத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ராமுத்தாய் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். சம்பவத்தன்று மாரிக்கண்ணன் தனது நண்பர் பாலமுருகனுடன், மாமனார் ரவியின் வீட்டிற்கு வந்து மாட்டுத் தொழுவத்தில் கட்டியிருந்த 2 மாடுகளை கத்தியால் வெட்டியதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது. மற்றொரு மாடு படுகாயம் அடைந்தது. இதனை கண்ட ரவி மற்றும் சிலர் ஓடிவந்து, மாரிக்கண்ணனை பிடிக்க முயற்சித்தனர். அப்போது மாரிக்கண்ணனும். அவருடைய நண்பர் பாலமுருகனும் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனர். இதனைத் தொடர்ந்து ரவி, காயம் அடைந்த மாட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றநிலையில், அந்த மாடும் இறந்துவிட்டது. இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி, மாரிக்கண்ணன், பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 2 மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்