மின்சாரம் தாக்கி 2 மாடுகள் சாவு

திசையன்விளை அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் இறந்தன.;

Update:2023-10-16 00:30 IST

திசையன்விளை:

திசையன்விளை அருகே இடையன்குடியை சேர்ந்தவர் பால் கோனார் (வயது 60). தொழிலாளி. நேற்று காலை இவரது பேரன் இசக்கிமுத்துவுடன் இடையன்குடி- குட்டம் சாலையில் விளையாட்டு மைதானம் அருகில் உள்ள ஒரு இடத்தில் இரட்டை மாட்டு வண்டியில் பனை விதைகளை எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் ஒயரை மாடுகள் மிதித்ததில் மின்சாரம் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மாட்டு வண்டியில் பயணம் செய்த பால் கோனார், அவரது பேரன் இசக்கிமுத்து ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்