2 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்

ஆலங்குடி அருகே 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2023-07-18 18:53 GMT

குடிசையில் தீ

ஆலங்குடி அருகே கூழையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி ஞானசுந்தரி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து தூக்கத்தில் இருந்து கண்விழித்த ஞானசுந்தரி வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது குடிசையின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் வீட்டிலிருந்த அனைவரையும் எழுப்பி வெளியே அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

ஆனால் தீ மளமளவென பரவி குடிசை முழுவதும் எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஞானசுந்தரியின் மகன் கோயில்செல்வம் குடிசை, மாட்டு கொட்டகையிலும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தை ராசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசைகள் எரிந்து நாசமானது.

இதில் வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள், பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்