கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் கைது

இரட்டை கொைல வழக்கில் கட்டிட ெதாழிலாளி 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-12 20:11 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தில் சந்தனகுமார் (வயது23) என்ற கட்டிட தொழிலாளியும் அவரது நண்பர் கே.மணிகண்டன் (18) என்பவரும் கிராமத்தில் உள்ள கண்மாய் மடையருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பி.மணிகண்டன்(21) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் வச்சக்காரப்பட்டி அருகே பூசாரிப்பட்டி கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலையுண்ட சந்தனகுமார் தன்னிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததால் தனக்கும் அவருக்கும் இடையே பகை வளர்ந்த நிலையில் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தான் மட்டுமே இருவரையும் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் உறுதியாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கொலைச் சம்பவம் நடந்த பின்பு கிராமத்தை விட்டு வெளியேற அக்கிரகாரபட்டியைச் சேர்ந்த தனது நண்பர் கட்டிட தொழிலாளியான வீரபெருமாள் (21) என்பவரை அழைத்ததாகவும் அவர் தனது இருசக்கர வாகனத்தில் தன்னை கிராமத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அக்கிரகாரப்பட்டியைச் சேர்ந்த வீர பெருமாளையும் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்