துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-07-23 17:10 GMT

செங்கம்

செங்கம் பேரூராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பாதுகாப்பற்ற முறையில் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டது குறித்து கடந்த 20-ந் தேதி தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக செங்கம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக உள்ள சின்னப்பன் மற்றும் துப்புரவு பணியாளர் அருள் ஆகிய 2 பேரையும் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்