வெள்ளகோவில்,
வெள்ளகோவிலில் 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாயார் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2 குழந்தைகள் கொலை
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத் (வயது 46). விவசாயி. இவருடைய மனைவி ரேவதி என்கிற பேபி (39). இவர்களது மகள் ஹர்ஷிதா (12), மகன் கலைவேந்தன் (7). குழந்தைகள் இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளி முடிந்து 2 குழந்தைகளும் வீட்டுக்கு வந்தனர். அப்போது ரேவதி அங்கு தோட்டத்தில் உள்ள மற்றொரு வீட்டிற்கு அழைத்து சென்று கதவை உட்புறமாக பூட்டி இரும்பு கம்பியால் 2 குழந்தைளையும் அடித்துக்கொன்றார். பின்னர் தானும் விஷத்ைத குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ரேவதியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதற்கிடையில் கொலையான குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வௌ்ளகோவில் நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு 2 குழந்தைகளின் உடலும் நேற்று மாலை எரியூட்டப்பட்டது.
தாயாரும் சாவு
இந்த நிலையில் கோவையில் சிகிச்சை ெபற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது ெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெற்ற குழந்தைகளை தாயே கொடூரமாக அடித்துக்கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.