மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-28 17:33 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு கீழநத்தம் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் புகார் தெரிவித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஆலவாய் காட்டு ஓடையில் சோதனை நடத்தினர். அப்போது மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். பின்னர் 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்