2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கே.வி.குப்பம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

Update: 2023-06-05 17:42 GMT

கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் மோட்டூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கேவி.குப்பம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதே போல சென்னங்குப்பம் ஊராட்சி, ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கொல்லை கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோவில் உண்டியலையும் உடைத்து திருட்டு நடந்துள்ளது.

அடிக்கடி கோவில்களில் உண்டியல் திருட்டு நடைபெற்று வருவதால் தகுந்த பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்தி இரவு நேர கண்காணிப்பும் ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்