2 சிறுவர்கள் மாயம்; போலீசார் விசாரணை
2 சிறுவர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் கார்த்திக் நாதன் (வயது 14). இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் சுசீலா, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் ராஜீவ் நகரை சேரந்தவர் வேணு. இவருடைய மகன் சிவராஜ் பிரசன்னகுமார் (17). வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் சுகந்தி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.