மொபட், செல்போன் திருடிய 2 சிறுவர்கள் கைது

அய்யம்பாளையத்தில் மொபட், செல்போன் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-10 21:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் அய்யம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவர் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 சிறுவர்கள் மொபட் மற்றும் அதில் இருந்த செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றனர்.

இதை கண்ட முஜிபுர் ரகுமான் ஓடிச்சென்று அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது. பின்னர் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மொபட் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும், கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்