போதை பொருட்கள் விற்ற 2 பெட்டி கடைக்கு 'சீல்'
வேலூர் அருகே போதை பொருட்கள் விற்ற 2 பெட்டி கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
வேலூரை அடுத்த செதுவாலை பகுதியில் உள்ள பெட்டி, மளிகை கடைகளில் விரிஞ்சிபுரம் போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது பன்னீர்செல்வம், சக்கரவர்த்தி ஆகியோரின் பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போதை பொருட்கள் விற்பனை செய்த 2 பெட்டி கடைக்கும் அணைக்கட்டு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.