காவிரி ஆற்றில் 2 உடல்கள் மீட்பு:அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம்

காவிரி ஆற்றில் 2 உடல்கள் மீட்கப்பட்டன. அவா்கள் யாா் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனா்.

Update: 2023-10-17 20:43 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் 3 உடல்கள் மிதப்பதாக நேற்று முன்தினம் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாரும், ஈரோடு தீயணைப்பு படை வீரர்களும் அங்கு சென்று தேடியபோது 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் மீட்கப்பட்டது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வெண்டிபாளையம் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றிலும் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலை மொடக்குறிச்சி போலீசார் மீட்டனர். இந்த 2 உடல்களும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. பிணமாக மிதந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? அவர்கள் எப்படி இறந்தனர்? போன்ற எந்த விவரங்களும் தெரியவரவில்லை. எனவே அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்