3 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது

தேவகோட்டை பகுதியில் 3 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து உருக்கி வைத்திருந்த 36 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.;

Update: 2023-02-24 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை பகுதியில் 3 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து உருக்கி வைத்திருந்த 36 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

திருட்டு

தேவகோட்டை இ.பி. ரோட்டில் கடந்த ஆண்டு பட்டப்பகலில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியும், புவனேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் ஆவரங்காடு பகுதி வி.பி.நகரில் மகாலிங்கம் என்பவரின் வீட்டை பட்டப்பகலில் கதவை உடைத்து அதன் உள்ளே இருந்த 23 பவுன் நகைகளையும் திருடி சென்றனர். இது குறித்து தேவகோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்ட சூப்பிரண்டு பொறுப்பு ஸ்டாலின் மேற்பார்வையில் தேவகோட்டை நகர இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இது தொடர்பாக. விருதுநகர் மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த ஹரிஹரன் வயது (40), குடவாசல் பத்தூர்பணம்கரையைச் சேர்ந்த மணிகண்டன் (38), ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் திருடிய நகைகளை கடையில் விற்றால் மாட்டி கொள்வோம் என நினைத்து அதை உருக்கி இருவரும் பங்கு பிரித்து வைத்திருந்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த 36 பவுன் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்