பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது

பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-22 19:08 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மனைவி கலைச்செல்வி(வயது 48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபட்டில் சென்றபோது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கலைச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசில் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேசன்(22), அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(21) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டத்தில் நடந்த குற்ற வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கை.களத்தூர் போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரிடமிருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்