ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
கிணத்துக்கடவு
தமிழக-கேரள எல்லையில் உள்ள கிணத்துக்கடவு-பாலார்பதி சாலையில் பொள்ளாச்சி குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த 2 இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் இருசக்கர வாகனங்களில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாலார்பதியை சேர்ந்த சரவணகுமார்(வயது 23), சென்றாம்பாளையத்தை சேர்ந்த சபாபதி(43) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.