நகராட்சி குப்பை வண்டியை திருடிய 2 பேர் கைது

சங்கரன்கோவிலில் நகராட்சி குப்பை வண்டியை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-12-18 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாணபாண்டி மகன் ஹரிஹர மதுசுதன் (வயது 44). சங்கரன்கோவில் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் கருப்பசாமி (29).

ஹரிஹர மதுசுதனும், கருப்பசாமியும் திருவேங்கடம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ள பயன்படுத்தப்படும் வண்டிகளை திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக தூய்மை பணியாளர் மேற்பார்வையாளர் சேக் மைதீன் சங்கரன்கோவில் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் குப்பை வண்டியை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்