ஒரே நாளில் 9 பேரிடம் செல்போன்களை பறித்த 2 பேர் கைது

ஒரே நாளில் 9 பேரிடம் செல்போன்களை பறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-29 09:31 GMT

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 20-ந் தேதி அதிகாலையில் நடந்து சென்றவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்போன்களை பறித்து சென்றதாக புகார்கள் வந்தன. இதையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வியாசர்பாடி வரை உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர்.

அதில் வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பரத் (வயது 19), ஏழுகிணறு சண்முகராயன் தெருவை சேர்ந்த தனுஷ் (20) ஆகியோர்தான் இந்த செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் இருவரும் அதிகாலையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் சாலையில் தனியாக நடந்து சென்ற 9 பேரிடம் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து சென்றது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்