பெண்ணை கத்தியால் குத்திய 2 பேர் கைது
பெண்ணை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியமங்கலம் உக்கடை காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி மனைவி அமராவதி(வயது 49). இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபு (38) என்பவரிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதனை ரூ.20 ஆயிரம் வீதம் அவரிடம் திரும்பி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரபு, ரெங்கநாதன் (65) ஆகியோர் அமராவதியின் வீட்டிற்கு சென்று மீதி பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் அமராவதி காலில் கத்தியால் குத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், அரியமங்கலம் போலீசார் பிரபு, ரெங்கநாதன் ஆகியோரை கைது செய்தனர்.