டாஸ்மாக் பாரில் வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது

நெல்லை அருகே டாஸ்மாக் பாரில் வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-24 18:43 GMT

நெல்லை அருகே உள்ள தாழையூத்து, பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 49). இவருடைய மகன் இசக்கிபாண்டி (29). இவரது பிறந்த நாளையொட்டி, அவருடைய நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டி (29) என்பவர் பார்ட்டி கேட்டுள்ளார். அதற்காக நேற்று முன்தினம் இருவரும் சேர்ந்து தாழையூத்து அருகே உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த திருமலைகொழுந்துபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்த சாமுவேல் செல்லத்துரை (38), தாழையூத்து ஜோசப் பள்ளி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்துள்ளனர்.

இதைக்கண்ட இசக்கி பாண்டி, அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சாமுவேல் செல்லதுரை, சதீஷ்குமார் ஆகியோர் இசக்கி பாண்டி, பூல்பாண்டி ஆகிய இருவரையும் அவதூறாக பேசி கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து சாமுவேல் செல்லதுரை, சதீஷ்குமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்