வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-09-21 19:00 GMT

திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 32). இவர் டிராக்டர் சொந்தமாக வைத்துள்ளார். இந்த நிலையில் கதிரவன் கடந்த 15-ந் தேதி பொன்மாந்துறையில் இருந்து தாமரைக்குளம் ரோட்டில் டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பெரியபொன்மாந்துறையை சேர்ந்த அன்பழகன் (20), எம்.எம் கோவிலூரை சேர்ந்த முகமது சமீன் (19), நல்லேந்திரபுரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (23), வினோத் (22) ஆகியோர் கதிரவனிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் 4 பேரும் சேர்ந்து கதிரவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகினர்.

இதில் பலத்த காயமடைந்த அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்பழகன் உள்பட 4 பேர் மீதும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ஜெயக்கிருஷ்ணன், ஏற்கனவே நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அன்பழகன், முகமதுசமீன் ஆகியோர் நேற்று திண்டுக்கல் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்