பெண்ணிடம் சங்கிலி- செல்போன் பறித்த 2 பேர் கைது
பெண்ணிடம் சங்கிலி- செல்போன் பறித்த 2 பேர் கைது
தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). கடந்த மாதம் 1-ந்தேதி இவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆலக்குடி ெரயில்வே ஸ்டேஷன் அருகே 4 பேர் கொண்ட கும்பல் ரம்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து ரம்யா வல்லம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில தப்பி ஓடிய 4 பேரை போலீசாார் தேடிவந்தனர். நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பை அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை அண்ணா நகரை சேர்ந்த கபினேஷ் (21), தஞ்சை நாவலர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (23) ஆகியோர் என்பதும், ரம்யாவிடம் சங்கிலி, செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபினேஷ், ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சங்கிலி, செல்போனை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இ்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.