திருவாலங்காடு அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

திருவாலங்காடு அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-14 07:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வழியாக சென்னைக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழையனூர் வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 25), பெருமாள் (30), என்பது தெரியவந்தது. இருவரும் திருவாலங்காடு அடுத்த மணவூர் கிராமத்தில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி சென்னையில் விற்பனைக்கு எடுத்து செல்லும்போது பிடிபட்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து குடிமை பொருள் அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்