மாக்கினாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
மாக்கினாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வஞ்சியாபுரம் பிரிவு பகுதிகளில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியில் நின்ற காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளா மாநிலம் எலப்பள்ளியை சேர்ந்த அப்பு (வயது 26), அத்திக்கோடு பகுதியை சேர்ந்த நிகில் (22) என்பதும், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ கொண்ட 8 மூட்டைகளில் இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.