காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-19 20:10 GMT

நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் போலீசார் நேற்று நாங்குநேரி -மூலைக்கரைப்பட்டி ரோட்டில் செண்பகராமநல்லூர் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 15 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாங்குநேரி கிருஷ்ணன்புதூரை சேர்ந்த சுரேஷ் (வயது 46), வடலிவிளைபுதூர்ரைச் சேர்ந்த சுடர் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் காருடன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்