ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

திசையன்விளையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-12-22 21:30 GMT

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திசையன்விளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் நாங்குநேரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கொம்பையா (வயது 43), ராதாபுரம் தாலுகா வடலிவிளைபுதூரை சேர்ந்த சுடர் (30) ஆகியோர் என்பதும், 520 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்