ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

மூன்றடைப்பு அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-07 19:50 GMT

நெல்லை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று மதுரை- கன்னியாகுமரி சாலையில் மூன்றடைப்பு பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து காரில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சாமி சன்னதி தெருவை சேர்ந்த பொன்துரை (வயது 25), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து (20) ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்