ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

கடையநல்லூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-25 13:08 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ெரயில்வே பீடர் சாலையில் கடையநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனங்களில் மொத்தம் 50 கிலோ வீதம் 50 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கிருஷ்ணாபுரம் ெரயில்வே பீடர் சாலையில் பகுதியைச் சேர்ந்த மாடசாமி (வயது 35) என்பவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ரெயில் மூலம் கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், மாடசாமி மற்றும் லோடு ஆட்டோ டிரைவர் அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (23) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி, லோடு ஆட்டோ, மோட்டார் ைசக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், மாடசாமி, அண்ணாதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்