ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி-வீராணம் ரோட்டில் நெட்டூர் விலக்கு சந்திப்பில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துத்திகுளத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 33), குறிப்பன்குளத்தை சேர்ந்த டிரைவரான வீரபத்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி, லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.