மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி 30-வது வட்டத்தில் தெர்மல் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த கொல்லிருப்பு கிராமத்தைசேர்ந்த வெங்கடேசன் மகன் அறிவழகன் (வயது 32), அவருடன் வந்த சின்னகாப்பாங்குளம் கிராமம் பன்னீர்செல்வம் மகன் விஜயகுமார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.