மதுபாட்டில்கள் கடத்திய 2 போ் கைது
மதுபாட்டில்கள் கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
விக்கிரவாண்டி;
விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த செஞ்சி தாலுகா கொம்மேட்டை சேர்ந்த ராஜ் (வயது 41), ராம்கி (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 60 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.