மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் தச்சமொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள குடிநீர் தொட்டி அருகே கோவில் பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்ற 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர். இதில் 60 கிராம் கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் மறைத்து கடத்தி செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் இசக்கிமுத்து (வயது 19), முனைஞ்சிபட்டியை சேர்ந்த இசக்கிதுரை மகன் கல்யாணசுந்தரம் (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.