கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-09 19:25 GMT

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் தலைமையில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர்- விருத்தாசலம் சாலையில் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் நடந்து வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் மீனாட்சிபேட்டை வைத்தி முதலி தெருவை சேர்ந்த ராமு மகன் அசோக்(வயது 23), பாட்டை தெருவை செல்வராஜ் மகன் சுரேஷ் (42) என்பதும் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 11½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்